மும்மொழிக் கொள்கையை அறிவுள்ளவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.
1968-ல் இருந்து இன்று வரை மும்மொழிக் கொள்கை பேசப்பட்டு வருகிறது. தமிழகத்தில் இரண்டு மொழி கொள்கை எடுத்துக் கொண்டதால் நல்ல பலன் கிடைத்துள்ளது.
இந்தியாவில் எங்குமே மும்மொழிக் கொள்கை முழு அளவில் இல்லை. தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கை அமலில் இருந்தாலும் சிறப்பான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை இந்தி தெரியாது என்கிறார். அதனால் அவருக்கு ஏதாவது பாதிப்பு வந்ததா? வட இந்தியாவில் 2-வது மொழியை முழுமையாக கற்று கொண்டிருந்தால் 3-வது மொழி தேவைப்பட்டிருக்காது.
மத்திய பா.ஜ.க. அரசின் மும்மொழிக் கொள்கையை அறிவுள்ள யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.