Tuesday, February 4, 2025

பாஜக கொடி கட்டிய காரில் பட்டா கத்தி, துப்பாக்கி…தப்பி ஓடிய மர்ம கும்பல்

பாஜக கொடி கட்டிய கருப்பு நிற கார்களில் வலம் வந்த 9 பேர் கொண்ட ரவுடி கும்பலை, தீவட்டிப்பட்டி போலீசார் சுற்றி வளைக்கும்போது தப்பியோடினர். கார் மற்றும் காரில் இருந்த கத்திகளை பறிமுதல் செய்து ஆயுத சட்டப்பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி பகுதியில் ரவுடி கும்பல் கார்களில் வலம் வந்து மக்களை அச்சுருத்துவதாக புகார் எழுந்தது. தீவட்டிப்பட்டி போலீசார் காடையாம்பட்டி சந்தைப்பேட்டை பகுதியில் சோதனை செய்தபோது, பாஜக கொடி கட்டிய 2 ஸ்கார்பியோ கார்களில் ரவுடி கும்பல் இருந்துள்ளது. அவர்களை சுற்றி வழைத்து விசாரணை நடத்தும்போது, போலீசாரை ஏமாற்றிவிட்டு 9 பேரும் இருட்டில் தப்பியோடி விட்டனர்.

கும்பலை எங்கு தேடியும் கிடைக்காத நிலையில், வழக்கறிஞர் ஸ்டிக்கர் ஒட்டிய 2 கார்களையும், காரில் இருந்த பட்டா கத்திகள், துப்பாக்கி போன்ற ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தப்பி ஓடிய 9 பேரை தேடி வருகின்றனர். இவர்கள் மீது நகை திருட்டு, ஆட் கடத்தல் உட்பட 16 வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

Latest news