குஜராத் மாநிலத்தில் தை முதல் நாள் உத்தராயண் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்நாளில் மக்கள் வானில் பட்டம் விட்டு கொண்டாடுவது வழக்கம். உத்தராயண் பண்டிகையையொட்டி குஜராத் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மக்கள் வண்ணவண்ண பட்டமிட்டு மகிழ்ந்தனர்.
இந்நிலையில் உத்தராயண் பண்டிகையின்போது பட்டத்தின் மாஞ்சா நூல் கழுத்தை அறுத்து இன்று ஒரேநாளில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். மாஞ்சா நூல் தடை செய்யப்பட்ட பிறகும் அதனை பயன்படுத்துவதால் இது போன்ற உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.