கேரள மாநிலம் பத்தனம்திட்டாவிலிருந்து கொல்லம் செல்லும் பாதையில் அரசு பேருந்தை இயக்கிய ஓட்டுநர் ஷிபு தாமஸ், தலையில் ஹெல்மெட் அணிந்து கொண்டு சென்ற வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
இந்தியாவில் இன்று நாடு தழுவிய பொது வேலைநிறுத்தம் நடைபெற்று வருகிறது. போராட்டத்தின்போது தாக்குதல் ஏற்படும் அபாயம் இருப்பதால், பாதுகாப்புக்காக ஹெல்மெட் அணிந்ததாக அந்த ஓட்டுநர் கூறினார்.