கடந்த மாதம் 27ம் தேதி கரூர் மாவட்டத்தில் தவெக சார்பில் நடைபெற்ற விஜயின் பரப்புரையின்போது கூட்டநெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனார்.
இந்த சம்பவம் உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், மாநில மற்றும் தேசிய அளவில் குழுக்கள் அமைச்சர் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக நீதிமன்றங்களில் வழக்கு விசாரணையும் நடைபெற்று வருகிறது. கட்சி தலைவர்களும் பிரபலங்களும் சம்பவ இடத்தை நேரில் ஆய்வு செய்துவரும் நிலையில், கரூர் வேலுச்சாமிபரத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவரும் MP-மான கமல்ஹாசன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
மேலும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியுடன் நேரில் சந்தித்து கமல்ஹாசன் ஆறுதல் தெரிவித்தார்.