வெப்ப அலை காரணமாக கர்நாடகாவில் 9 மாவட்டங்களுக்கு மட்டும் அரசு அலுவலக நேரத்தை மாற்றம் செய்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
கர்நாடகாவில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக, பல்வேறு இடங்களில், வெப்ப அலையும் வீசி வருகிறது. வெயிலின் தாக்கத்தை சமாளிக்க முடியாத நிலையில், அரசு அலுவலகங்கள் செயல்படும் நேரத்தை மாற்றம் செய்து கர்நாடகா அரசு உத்தரவிட்டுள்ளது.
காலை 10 மணி முதல் மாலை 5.30 வரை இருந்த அலுவலகப் பணி நேரத்தை, காலை 8 மணி முதல் மதியம் 1.30 மணியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.