என்ன டிரஸ் சார் இது? கமலை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்ஸ்

29
Advertisement

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பிக் பாஸ் சீசன் சிக்ஸ் finale நடந்து முடிந்துள்ளது. இந்த சீசனின் வெற்றியாளராக அசீம் அறிவிக்கப்பட்ட நிலையில், விக்ரமனும் ஷிவினும் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளனர்.

வழக்கமாக, பிக் பாஸ் இறுதி நிகழ்ச்சிக்கு கமல் கோட் சூட், வேட்டி சட்டை என கெத்தாக என்ட்ரி கொடுப்பார். டிசைனர் ரக ஆடையாக இருந்தாலுமே, கச்சிதமாக ஸ்டைலாக தேர்ந்த்தெடுத்து அணிபவர் கமல்.

இந்நிலையில், நேற்றைய நிகழ்ச்சிக்கு கமல் அணிந்து வந்த உடை கவனம் ஈர்த்துள்ளது. நீலத்தில் வெள்ளையை தெளித்தார் போல அமைந்த அந்த ஆடை, கமலை கலாய்த்து தள்ள நெட்டிசன்களுக்கு புது content கொடுத்து சென்றுள்ளது.

Advertisement

‘என்ன சார் பறவை ஏதும் எச்சம் போட்ருச்சா’, ‘பெயிண்ட் மேல கொட்டிருச்சா’ மற்றும் ‘பெயிண்ட் அடிக்குறவரோட டிரஸ் எடுத்துட்டு வன்டீங்களா’ என நெட்டிசன்கள் கமலை ட்ரோல் செய்து வருகின்றனர்.