Wednesday, September 3, 2025

நாயை பற்றிக்கேட்டால் கழுதையை பற்றி பேசிய கமல்ஹாசன்.!

அண்மை காலமாக தெருநாய் விவகாரம் இந்தியா முழுவதும் பேசுபொருளாகி இருக்கிறது. குறிப்பாக நீயா, நானா நிகழ்ச்சியில் தெருநாய் விவகாரம் குறித்து விவாதம் நடந்தது. அதன் பிறகே தெருநாய்களுக்கு ஆதரவாக பேச வந்தவர்களை சோசியல் மீடியாவில் கிண்டல் செய்ய தொடங்கினர். இதற்காக துணை நடிகை அம்மு, படவா கோபி என ஆகியோர் விளக்கம் அளித்தனர்.

இது தொடர்ச்சியாக தெருநாய்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து சோசியல் மீடியாவிலும், மக்கள் மத்தியிலும் விவாதங்கள் நடந்து வருகின்றன. தெருநாய்களால் ஏற்படும் ரேபீஸ் நோய் குறித்த விவாதங்களும் அதிகமாகி இருக்கின்றன. இதனிடையே திருவண்ணாமலையில் தெருநாய் குறுக்கே வந்ததால் விபத்தில் சிறுமி ஒருவர் உயிரிழந்தார். இதனால் தெருநாய்களை கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெருநாய்களுக்கு ரேபீஸ் தடுப்பூசி போட வேண்டும் என்றும் கோரிக்கைகள் அதிகரித்து வருகிறது .

இந்த நிலையில் தெருநாய் பிரச்சனை குறித்து நடிகரும்,மாநிலவை MP யும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து கமல்ஹாசன் கூறுகையில், தெருநாய்கள் பிரச்சனைக்கு தீர்வு மிகவும் எளிதானது. விஷயம் தெரிந்தவர்கள், உலக சரித்திரம் தெரிந்தவர்கள், சமூக சுகாதாரம் தெரிந்தவர்கள்.. கழுதை காணாமல் போனது குறித்து கவலைப்படுகிறார்களா? கழுதை எல்லாம் காணாமல் போய்விட்டதே.. நமக்காக எவ்வளவு பொதி சுமந்துள்ளது. இப்போது பார்க்கிறதே இல்லையே..

கழுதையை யாராவது காப்பாற்ற வேண்டும் என்று பேசுகிறார்களா.. எல்லா உயிர்களையும் காப்பாற்ற வேண்டும்.. எவ்வளவு முடியுமோ காப்பாற்ற வேண்டும். அவ்வளவுதான் என்னுடைய கருத்து என்று தெரிவித்துள்ளார். தற்போது இந்த விஷயம் பெரும் பேசுபொருளாகியுள்ளது..

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
Latest News