கமலுக்கு திடீர் உடல்நலக்குறைவு! இந்த வார பிக்பாஸ் தொகுப்பாளர் யார்?

15
Advertisement

ஹைதராபாத்தில் இருந்து திரும்பி வந்த கமலுக்கு திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவின் காரணமாக நவம்பர் 23ஆம் தேதி போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இதையடுத்து, கமல் லேசான காய்ச்சல், இருமல் மற்றும் சளியால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் ஓரிரு நாட்களில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் மருத்துவ நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது.

இன்று கமல் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டாலும் உடல்நலக்குறைவினால் ஏற்பட்ட உடல் சோர்வில் இருந்து மீண்டு, பிக் பாஸ் தமிழ் வார இறுதி நிகழ்ச்சியில் பங்கேற்பாரா என்பது கேள்விக்குறியாகி உள்ளது.

Advertisement

பணிக்கு உடனடியாக திரும்ப கமல் விரும்புவதாக ஒரு பக்கம் பேசப்பட்டாலும், இந்த வார நிகழ்ச்சியை  தற்காலிக தொகுப்பாளரை வைத்து நடத்தப்பட சாத்தியக்கூறுகள் அதிகம் இருப்பதாக பார்க்கப்படுகிறது.

அப்படி நடத்தப்படும் பட்சத்தில் யார் அந்த தொகுப்பாளராக இருக்க முடியும் என சமூகவலைதளங்களில் நெட்டிசன்கள் தங்கள் அபிமான பிரபலங்களின் பெயர்களை பதிவிட்டு வருகின்றனர்.