Sunday, December 22, 2024

கள்ளக்குறிச்சி சாராய வழக்கு : சிபிஐ விசாரிக்க தடையில்லை..!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த ஜூன் மாதம் கள்ளச்சாராயம் குடித்து 67 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரிக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. இதற்கு அதிமுக, பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.

இதையடுத்து இந்த வழக்கு சிபிஐ க்கு மாற்றப்பட்டது. இதனை எதிர்த்து தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தமிழக போலீசாரின் விசாரணை முடிந்துவிட்டது. தமிழக போலீசாரின் விசாரணையில் எவ்வித தவறும் இல்லை என விளக்கம் கொடுத்தார்.

இதனை ஏற்க மறுத்த சுப்ரீம் கோர்ட், சென்னை ஐகோர்ட் உத்தரவில் தலையிட வேண்டிய அவசியம் இல்லை எனக்கூறி, தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தனர். இதனால், கள்ளச்சாராய வழக்கை சி.பி.ஐ., விசாரிக்க தடையில்லை.

Latest news