Saturday, April 12, 2025

சர்ச்சையில் சிக்கிய யஷ்வந்த் வர்மா அலகாபாத் நீதிமன்றத்திற்கு பணியிடமாற்றம்

டெல்லி உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்தவர் யஷ்வந்த் வர்மா. இவரது வீட்டில், கத்தை கத்தையான ரூபாய் நோட்டுகள் தீயில் எரிந்த நிலையில் இருக்கும் வீடியோ இணையதளத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த விவகாரம் பூதாகாரமான நிலையில் இது குறித்து உச்சநீதிமன்றம் கண்காணிப்பில் 3 பேர் கொண்ட குழு விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில் நீதிபதி யஷ்வந்த் வர்மா டெல்லி நீதிமன்றத்தில் இருந்து அலகாபாத் நீதிமன்றத்திற்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டார்.

வீட்டில் பணம் கண்டுபிடிக்கப்பட்டது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதால் விசாரணை தொடர்பாக அக்குழு அறிக்கை சமர்பிக்கும்வரை யஷ்வந்த் வர்மா எந்த வழக்கையும் விசாரிக்க மாட்டார் என்றும் அவருக்கு நீதிமன்ற பணிகள் ஒதுக்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest news