சென்னையில் உள்ள வீடுகளில் தேங்கி இருக்கும் பயனற்ற பொருட்களை அகற்ற புதிய சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
மாநகராட்சி ஊழியர்கள் வாரந்தோறும் சனிக்கிழமை வீட்டிற்கே வந்து தேவையற்ற பொருட்களை பெற்றுக் கொள்வார்கள்.
தேவையற்ற பொருட்களை அகற்ற 1913 என்ற எண்ணுக்கு அழைப்பது அல்லது 9445061913 என்ற எண்ணுக்கு வாட்ஸ் அப்பில் தகவல் தெரிவிக்கலாம். வீடுகளில் உள்ள பயனற்ற பொருட்களை அகற்ற நம்ம சென்னை செயலியில் தகவல் தெரிவிக்கலாம்.
சென்னையை தூய்மையாக வைத்திருக்க பொதுமக்கள் இச்சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம் என
சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.