Tuesday, December 16, 2025

அதிரடி சலுகைகளால் மிரட்டும் ஜியோமார்ட்! ஐபோன் 16 பிளஸ் : இவ்வளவு குறைந்த விலையிலா?

ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்மார்ட்ஃபோன்கள் மற்றும் சாதனங்கள் இளம் தலைமுறையினரிடையே விற்பனை ரீதியாக நல்ல வரவேற்பு பெறுகின்றன. தற்போது, ஆப்பிள் சாதனங்களை குறைந்த விலையில் வாங்க ஆர்வமுள்ள பலர் ஆன்லைன் தளங்களில் போட்டி போடுகின்றனர். இந்நிலையில், ஐபோன் 16 பிளஸ் மாடலை ஜியோமார்ட் தளத்தில் அதிரடி தள்ளுபடி விலையில் வாங்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

ஆப்பிளின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் 128GB ஐபோன் 16 பிளஸ் மாடலின் விலை ரூ.79,900. ஆனால் ஜியோமார்ட் தளத்தில் இதே மாடலை வெறும் ரூ.65,990-க்கு வாங்கலாம். மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கிகளின் கார்டுகளுக்கு கிடைக்கும் சலுகைகள் மற்றும் கேஷ்பேக் ஆஃபர்களுடன் சேர்த்து மொத்தமாக ரூ.25,000 வரையிலான தள்ளுபடி பெற முடியும்.

ஐபோன் 16 பிளஸ் 6.7 இன்ச் சூப்பர் ரெட்டினா எக்ஸ்டிஆர் டிஸ்ப்ளே, டைனமிக் ஐலேண்ட் அம்சம், ஏ18 சிப்செட் மூலம் இயங்கும். கேமரா அமைப்பில் 48 மெகாபிக்சல் பிரைமரி சென்சார், 12 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் லென்ஸ், முன்புறத்தில் 12 மெகாபிக்சல் ஃபேஸ்டைம் கேமரா, ஃபேஸ் ஐடி Support உள்ளது. சார்ஜிங் வசதிக்கு USB-C கனெக்டர் மற்றும் 25W வயர்லெஸ் சார்ஜிங் Support வழங்கப்பட்டுள்ளது.

ஆப்பிள் தற்போது பிளஸ் மாடலுக்கு பதிலாக ஏர் மாடல் அறிமுகப்படுத்தியுள்ளதால், ஐபோன் 16 பிளஸ் சந்தையில் கிடைக்கும் கடைசி பிளஸ் மாடலாக இருக்கலாம். இதனால், புதிய மாடலுக்காக காத்திருக்காமல், ஜியோமார்ட் வழங்கும் அதிரடியான தள்ளுபடியில் வாங்குவதற்கு இது சிறந்த நேரமாகும்.

தற்போதைய சலுகையின்படி, ரூ.79,900 மதிப்புள்ள மாடலை வெறும் ரூ.65,990-க்கு வாங்கி, வங்கி சலுகைகள் மூலம் ரூ.25,000 வரை சேமிக்க முடியும். பண்டிகை கால தள்ளுபடிகளுக்கு இணையான இந்த சலுகை இருக்கிறது. மேலும் இது ஐபோன் 16 பிளஸ் வாங்கும் மக்களுக்கு சிறந்த வாய்ப்பாக கருதப்படுகிறது.

Related News

Latest News