இந்தியாவில் உள்ள பிரபல தொலைதொடர்பு நிறுவனங்களான ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடஃபோன் ஐடியா உள்ளிட்ட பிரபல நிறுவனங்கள் அனைத்தும், தங்களின் ரீசார்ஜ் பிளான்களின் கட்டணத்தை உயர்த்தின. இதனால் அதிருப்தி அடைந்த வாடிக்கையாளர்கள் BSNL க்கு தாவினார்.
இந்நிலையில் வாடிக்கையாளர்களுக்கு உள்ள சுமையை குறைக்கும் விதமாக தனித்தனியாக ரீசார்ஜ் செய்யும் முறையை டிராய் உத்தரவிட்டு இருந்தது. இதனையடுத்து ஜியோ, ஏர்டெல் நிறுவனங்கள் புதிய ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
தற்போது ஜியோவில் ரூ. 458 -க்கு ரீசார்ஜ் செய்தால் 84 நாட்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால் மற்றும் 1,000 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. முன்னதாக ரூ. 479-க்கு 84 நாள்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால், 6 ஜிபி டேட்டா மற்றும் 1,000 எஸ்எம்எஸ் அடங்கிய திட்டம் இருந்தது. தற்போது டேட்டா இல்லாமல் வாய்ஸ் கால், எஸ்எம்எஸ் வசதி மட்டும் கொண்டுள்ள திட்டம் அறிமுகமாகியுள்ளது.
ஏர்டெல் நிறுவனம் 2 புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் படி ரூ. 509 -க்கு 84 நாள்கள் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் மற்றும் 900 எஸ்எம்எஸ்-கள். ரூ. 1,999 -க்கு ஓராண்டுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் மற்றும் 300 எஸ்எம்எஸ்-கள் இலவசம். போன் அழைப்புகளை மட்டுமே பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு இந்தத் திட்டம் உதவும் என்று கூறப்படுகிறது.