VJ சித்து, இர்பான், மதன் கௌரி, கோபி-சுதாகருக்கு ஜாக்பாட்.. YouTube கிரியேட்டர்களை குறிவைக்கும் Netflix…

சினிமாவில் முன்னணி நட்சத்திரங்கள் எந்த இயக்குனருடன் இணைந்து நடித்தாலும், அவர்களின் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு கிடைப்பது வழக்கம்.

அதேபோல், சமூக வலைத்தளங்களிலும் சில முன்னணி கண்டென்ட் கிரியேட்டர்களுக்கு மட்டுமே அதிகப்படியான பார்வையாளர்கள் உள்ளனர்.

உலகம் முழுவதும் கண்டென்ட் கிரியேட்டர்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்தாலும், விளம்பர வர்த்தகத்தின் பெரும்பகுதி இந்த முன்னணி கிரியேட்டர்களை மையமாகக் கொண்டே நடைபெறுகிறது.

இதனை கருத்தில் கொண்டு, நெட்பிளிக்ஸ் திரைப்படங்கள், வெப் சீரிஸ், கேம்ஸ் ஆகியவற்றை தாண்டி பிரபல யூடியூப் கிரியேட்டர்களின் வீடியோக்களையும் தனது தளத்தில் வெளியிடும் முயற்சியில் இறங்கியுள்ளது.

இதற்காக Non-Exclusive Licensing Content ஒப்பந்தங்களை மேற்கொண்டு வருகிறது. Alan Chikin Chow, Nick DiGiovanni, Ms. Rachel உள்ளிட்ட கிரியேட்டர்களுடன் இதுபோன்ற ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளன.

நெட்பிளிக்ஸின் இந்த நடவடிக்கை யூடியூப்புக்கு சவாலாக மாறியுள்ளது. இதனால் முன்னணி கிரியேட்டர்களை தக்கவைத்துக்கொள்ள பல மில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தங்களை வழங்குவது குறித்து யூடியூப் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.

நெட்பிளிக்ஸில் 325 மில்லியன் பணம் செலுத்தும் சந்தாதாரர்கள் உள்ள நிலையில், யூடியூப்பில் 2.5 பில்லியன் பயனர்கள் உள்ளனர்.

எனினும், முன்னணி கிரியேட்டர்களை ஈர்ப்பதன் மூலம் தனது பார்வையாளர்களை மேலும் அதிகரிக்க நெட்பிளிக்ஸ் திட்டமிட்டுள்ளது.

Related News

Latest News