ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஆய்வு மையத்தில் இருந்து, NVS-2 செயற்கைகோளுடன் ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது. NVS-2 செயற்கைகோளின் ஆயுட்காலம் 10 ஆண்டுகள் என இஸ்ரோ அறிவித்துள்ளது.
உள்நாட்டில் தயாரான அனுக் கடிகாரம் உள்ளிட்ட அதி நவீன தொழில்நுட்பத்துடன் விண்ணில் ஏவப்பட்ட NVS-2 செயற்கைகோள், புவி சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்ட நிலையில், நடப்பாண்டின் முதல் ராக்கெட் ஏவுதல் மற்றும் செயற்கைகோள் நிலைநிறுத்தம் வெற்றியடைந்ததாக இஸ்ரோவின் தலைவர் வி.நாராயணன் அறிவித்தார்.
பேரிடர் காலங்களை துல்லியமாக கணிக்கவும், பிற செயற்கைகோள்களுடன் சேர்ந்து வான்வெளி போக்குவரத்து மற்றும் வழிகாட்டு சேவைகளுடன், விவசாயம் உள்ளிட்ட செயல்பாடுகளை NVS-2 செயற்கைகோள் மேற்கொள்ள இருப்பது குறிப்பிடத்தக்கது.