Monday, January 20, 2025

போரை இப்போது நிறுத்த முடியாது : இஸ்ரேல் பிரதமர் திட்டவட்டம்

போரை இப்போது நிறுத்த முடியாது, காசாவில் தாக்குதலை தொடர்வோம் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல்- ஹமாஸ் இடையேயான போர் ஓராண்டை கடந்தும் முடிவில்லாமல் நீடித்து வருகிறது. இதில் இஸ்ரேலை சேர்ந்த ஆயிரத்து 208 பேர் கொல்லப்பட்டுள்ள நிலையில், 252 பேர் பிணைக்கைதிகளாக உள்ளனர்.

இந்த நிலையில், போரை இப்போது நிறுத்த முடியாது. காசாவில் தாக்குதலை தொடர்வோம் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

தற்போது போரை நிறுத்தினால் ஹமாஸ் மீண்டும், தங்கள் மீது தாக்குதல் நடத்தக்கூடும் என்றும் காசாவின் ராணுவ மற்றும் நிர்வாகத் திறன்களை ஒழிப்பதை இலக்காக கொண்டுள்ளோம் எனவும் கூறியுள்ளார்.

Latest news