Thursday, February 19, 2026

ஈரானை நாசமாக்கிய இஸ்ரேல்! பல வருட பகைக்கு தீர்வு! தொடங்கியது ‘ஆபரேஷன் ரைசிங் லயன்’!

மத்திய கிழக்கு மீண்டும் ஒரு பெரும் நிலைகுலைவைக் காணபோகிறதா? என்கிற கேள்வி இப்போது உலக நாடுகளிடையே வழுத்துள்ளது.

இஸ்ரேல் தற்போது “ஆபரேஷன் ரைசிங் லயன்” என்ற பெயரில், ஈரான் மீது ஒரு அதிரடியான வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது. இந்த தாக்குதல், ஈரானின் தெஹ்ரான் மற்றும் நடான்ஸ் பகுதி அணுசக்தி மையங்களை நேரடியாகக் குறிவைத்ததோடு, பல உயர்மட்ட ராணுவ அதிகாரிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

இதில் IRGC தளபதி ஹொசைன் சலாமி மற்றும் முகமது பாகேரி உள்ளிட்ட முக்கிய ஆளுமைகள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

இஸ்ரேல் அரசு இதனை ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விளக்கியுள்ளது. காரணம், ஈரான் தற்போது 70% வரை யுரேனியம் செறிவூட்டியுள்ளது – இது அணு ஆயுத உற்பத்திக்குப் புறப்பட்ட தரத்துக்கு நெருக்கமாக உள்ளது. மேலும், ஈரான் ஒரு புதிய செறிவூட்டல் மையத்தையும் தொடங்கியுள்ளது.

இஸ்ரேலின் பிரதமர் நெதன்யாகுவும், “இப்போது செயல் எடுக்கவில்லை என்றால், பிற தலைமுறைகளுக்கே வாய்ப்பு இருக்காது” என்று ஒரு கூட்டத்தில் பேசியதன் பின், இந்த தாக்குதல் தொடங்கப்பட்டது.
இதற்குப் பின்னணி நெடுங்காலமானது. 1979ம் ஆண்டு இஸ்லாமிய புரட்சிக்கு முன், ஈரான்-இஸ்ரேல் உறவு நெருக்கமாக இருந்தது. ஆனால் அதன் பின், ஈரான் இஸ்ரேலை “சியோனிஸ்ட் ஆட்சி” என கண்டித்து, தீவிர எதிர்வினையில் ஈடுபட்டு வருகிறது.

ஹமாஸ், ஹெஸ்புல்லா, ஹவுதி போன்ற அமைப்புகளுக்கு ஈரான் ஆதரவு வழங்குகிறது – இவை அனைத்தும் இஸ்ரேலுக்கு எதிராக இயங்குகின்றன.
இஸ்ரேலும், சமீப காலமாக சிரியா, ஈராக் உள்ளிட்ட நாடுகளில் ஈரான் ஆதரவு படைகளை குறிவைத்து தாக்குதல்களை நடத்தியுள்ளது.

கடந்த மாதம், டமாஸ்கஸில் உள்ள ஈரான் தூதரக வளாகத்தில் நடந்த ராணுவக் கூட்டத்தின் மீது இஸ்ரேல் தாக்கியது – இது சர்வதேச விதிகளுக்கு நேரடியாக எதிரானது.

அந்த தாக்குதலில், IRGC மூத்த தளபதி ஜெனரல் ரெசா ஜாஹேதி உள்ளிட்ட ஏழு பேர் உயிரிழந்தனர். இதனால்தான், இப்போது தீவிரமாக்கப்பட்ட தாக்குதலாக “ஆபரேஷன் ரைசிங் லயன்” நிகழ்ந்திருக்கிறது.

இதனால், இஸ்ரேல்-ஈரான் இடையே நிலவும் மோதல், ஒரு முழு அளவிலான போராக வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Related News

Latest News