IPL தொடர் முடிந்தாலும் அதுகுறித்த செய்திகள் இன்னும் ஓயவில்லை. இதற்கு Trading முறை அமலில் இருப்பதே முக்கிய காரணமாகும். வீரர்களை வேறு அணிகளில் இருந்து வாங்கவோ, விற்கவோ முடியும் என்பதால் இந்த Trading முறைக்கு அணிகள் மத்தியில் எக்கச்சக்க வரவேற்பு இருக்கிறது.
அந்தவகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இப்போது இருந்தே தங்களின் பிளேயிங் லெவனை கட்டமைக்க ஆரம்பித்துள்ளது. இதற்காக ராஜஸ்தான், குஜராத், பஞ்சாப் ஆகிய அணிகளிடம் CSK பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதனால் ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன், குஜராத் ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் மற்றும் பினிஷர் ராகுல் தெவட்டியா ஆகிய மூவரும் சென்னைக்கு வர வாய்ப்புகள் அதிகமுள்ளன.
இந்தநிலையில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் 35 வயது ஆல்ரவுண்டர், மார்கஸ் ஸ்டோய்னிஸை CSK கேட்பதாக புதிய தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. 2024 IPL தொடரில் லக்னோ அணிக்காக ஆடிய ஸ்டோய்னிஸ் சென்னைக்கு எதிராக சேப்பாக்கத்தில் சதமடித்து, அணியை வெற்றி பெற வைத்திருப்பார். இந்த போட்டி அப்போது மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது.
எந்த அணிக்காக விளையாடினாலும், தன்னுடைய சிறந்த பங்களிப்பை தரக்கூடியவர் ஸ்டோய்னிஸ். பேட்டிங் மட்டுமின்றி பவுலிங்கும் நன்றாக செய்வார் என்பதால், இவரை Trading முறையில் எடுத்திட சென்னை ஆர்வம் காட்டுகிறதாம். பதிலுக்கு இங்கிருந்து 30 வயது நாதன் எல்லிஸை பஞ்சாப் கேட்டுள்ளதாம். எல்லீஸ் ஏற்கனவே பஞ்சாப் அணிக்காக ஆடியவர் என்பதால், இந்த Deal விரைவாகவே முடிவுக்கு வரலாம் என்று தெரிகிறது.