சமூக வலைத்தளங்களில் வைரலாகும்
கலைஞரின் திருமண அழைப்பிதழ்

219
Advertisement

இந்தத் தலைமுறையினருக்கு முன்னாள் முதலமைச்சர்
அமரர் மு.கருணாநிதியை முத்தமிழ் அறிஞராகவும், சிறந்த
பேச்சாளராகவும்தான் தெரியும். ஆனால், சிலேடைப் பேச்சில்
வல்லவர் என்பது பலரும் அறிந்திராத ஒன்று.

அதேபோல, கருணாநிதியின் திருமண அழைப்பிதழும்
ஆச்சரியங்கள் பல நிறைந்துள்ளதாக அச்சடிக்கப்பட்டுள்ளது.
அக்கால வாழ்வியல் முறையை அறிந்துகொள்ளவும் உதவும்
பொக்கிஷமாக உள்ளது.

5 முறைத் தமிழக முதல்வராகப் பணியாற்றிய மு.கருணாநிதி
கடவுள் நம்பிக்கை அற்றவர் என்பதைப் பலரும் அறிவர்.
அதற்கேற்பத் தனது திருமண அழைப்பிதழில் வாழ்க்கை
‘ஒப்பந்த அழைப்பு’ என்றே குறிப்பிட்டுள்ளார்.

தயாளு அம்மாள், கருணாநிதி இருவரும் தங்கள் திருமணத்துக்குத்
தோழர்களை அழைப்பதுபோல இந்த அழைப்பிதழ் உள்ளது.
மு. கருணாநிதி நாகப்பட்டிணம் மாவட்டம், திருக்குவளையில்
1924 ஆம் ஆண்டு, ஜுன் 3 ஆம் நாள் பிறந்தார். 14 வயதிலேயே
அரசியலில் ஈடுபடத் தொடங்கி 33 வயதிலேயே குளித்தலை எம்எல்ஏ
ஆனார். தனது 45 ஆவது வயதில் முதன்முறையாக முதல்வர் ஆனார்.
முன்னதாகத் தனது 24 ஆவது வயதில் தயாளு அம்மாளைத் திருமணம்
செய்துகொண்டார்.

தற்போது அமரர் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் சிலையை
சென்னை, ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துமனை வளாகத்தில்
இன்று(மே 28) திறக்கப்படவுள்ள நிலையில், அவரது திருமண அழைப்பிதழ்
வலைத்தளவாசிகளின் கவனத்தை ஈர்த்துவருகிறது,

”பேரன்புடையீர்,
15/9/48, புதன்கிழமை, காலை 9 மணிக்கு திருவாரூர் தெற்கு
வீதியில் நடைபெறவிருக்கும் எங்கள் வாழ்க்கை ஒப்பந்தத்திற்கு
தாங்கள் தோழர்களோடு வருகை தந்து சிறப்பிக்க வேண்டுகிறோம் ”
என்று அழைப்பு விடுத்துள்ளனர்.

அழைப்பிதழ் வாசகங்களின் கீழே அன்புள்ள மு. கருணாநிதி,
முரசொலி ஆசிரியர், திருவாரூர், என்றும், தயாளு, கீரனூர்
K.கோவிந்தசாமிப் பிள்ளை மகள் என்றும் குறிப்பிட்டு,
இருவரும் சேர்ந்து தங்கள் திருமணத்துக்கு வாழ்த்த அழைப்பு
விடுத்துள்ளனர்.

அழைப்பிதழின் அடிப்பகுதியில் சொற்பொழிவாளர்கள்
என்று குறிப்பிட்டு அறிஞர், தளபதி அண்ணாதுரை M.A.,
தோழர் T.K.சீனிவாசன், தோழர் N.S.இளங்கோ, தோழர்
புலவர் குழந்தையா ஆகியோரின் பெயர்களும் அச்சடிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தம்பதிக்குப் பிறந்த இரண்டாவது மகன்தான்
தற்போதைய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.

தமிழகத்தில் ஒரே குடும்பத்திலிருந்து இரண்டு முதல்வர்கள்…