Wednesday, December 17, 2025

’21 வயது’ வீரருக்கு இடம் ஆரம்பமே இப்படியா? ‘அதிர்ச்சியில்’ BCCI

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, தற்போது பயிற்சி ஆட்டத்தில் விளையாடி வருகிறது. அடுத்ததாக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஜூன் 20 தொடங்கி, ஆகஸ்ட் 4 வரை  நடைபெறுகிறது. இதற்கான இந்திய அணிக்கு, இளம்வீரர் சுப்மன் கில் கேப்டனாக நியமிக்கப்பட்டு இருக்கிறார்.

இந்தநிலையில் இங்கிலாந்து கிரிக்கெட் நிர்வாகம், டெஸ்ட் தொடருக்கான வீரர்களை அறிவித்துள்ளது. இதில் Ben Stokes, Shoaib Bashir, Jacob Bethell, Harry Brook, Brydon Carse, Sam Cook, Zak Crawley, Ben Duckett, Jamie Overton, Ollie Pope, Joe Root, Jamie Smith, Josh Tongue, Chris Woakes என்று மொத்தம் 14 வீரர்கள் இடம்பெற்று உள்ளனர்.

ஆல்ரவுண்டர் Ben Stokes கேப்டனாக அணியை வழிநடத்த உள்ளார். ஆச்சரியமாக IPL தொடரில் RCBக்காக ஆடிய 21 வயது இளம்வீரர் Jacob Bethellம், இங்கிலாந்து அணியில் இடம்பிடித்து இருக்கிறார். நியூசிலாந்துக்கு எதிரான அறிமுக டெஸ்ட் போட்டியில் Bethell 3 அரைசதங்களை அடித்து அசத்தினார்.

அத்துடன் IPL தொடரிலும் இந்திய பவுலர்களை Bethell சிறப்பாக எதிர்கொண்டு ஆடினார். இதுவே அவருக்கு அணியில் இடம் கிடைக்க காரணமாகி இருக்கிறது. இதனால் இந்திய பவுலர்களுக்கு Bethell மிகுந்த அச்சுறுத்தலாக இருப்பார் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

கடைசியாக 2007ம் ஆண்டு இங்கிலாந்து மண்ணில், இந்திய அணி டெஸ்ட் தொடரை வென்றிருந்தது. அதற்குப்பின் 18 ஆண்டுகளாக இங்கிலாந்தை, இந்தியாவால் வீழ்த்த முடியவில்லை. ஒருவேளை இந்த டெஸ்ட் தொடரை இந்திய அணி வெல்லவில்லை என்றால், அது தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர், தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் ஆகியோருக்கு, மிகுந்த பின்னடைவை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

Latest News