வருங்காலத்ல உங்க ரத்தத்துல ப்ளாஸ்டிக் இருக்கான்னு கேக்குற நிலைமையா..?

455
Advertisement

நாம் அன்றாடம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருள்களான தண்ணீர் பாட்டில்கள், பைகள், பொம்மைகள் முதலானவை நமது ரத்தத்தில் கண்டறியும் அளவுக்கு சேர்வதைக் கண்டுபிடித்துள்ளனர் விஞ்ஞானிகள் குழு . `என்விரான்மெண்ட் இண்டர்நேஷனல்’ என்ற அறிவியல் ஆய்வு இதழில் வெளியிடப்பட்டுள்ள இந்த ஆய்வு முடிவுகளின் படி, நாம் வாழும் சூழலில் நம்மைச் சுற்றியுள்ள சிறிய பிளாஸ்டிக் துண்டுகள் நமது ரத்தத்தில் உறிஞ்சிக் கொள்ளப்படுகிறது எனக் கூறப்படுள்ளது.

மனித ரத்ததில் மைக்ரோ, நானோ அளவிலான பிளாஸ்டிக் பொருள்களைக் கணக்கிடும் முறையை பயன்படுத்தி  பிளாஸ்டிக் பொருள்களின் அடிப்படை வேதிப்பொருள்களை சுமார் 22 பேரிடம் சோதனை செய்ததில் சராசரியாக ஒவ்வொருவரும் தங்கள் ரத்தத்தில் ஒரு மில்லி லிட்டருக்கு சுமார் 1.6 மைக்ரோகிராம் அளவிலான பிளாஸ்டிக் வேதிப்பொருள்களைக் கொண்டிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

அதவாது சுமார் 10 பெரிய குளியல் தொட்டிகளில் ஒரு டீஸ்பூன் பிளாஸ்டிக் பொருள்கள் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. மேலும் சோதனை செய்யப்பட்டதில் நான்கில் ஒருவரின் ரத்த மாதிரிகளில் கணக்கிடும் அளவுக்குப் பிளாஸ்டிக் பொருள்கள் எதுவும் இல்லை எனவும் கூறப்பட்டுள்ளது.