Saturday, July 12, 2025

பிரதமர் மோடி அரசியலில் இருந்து ஓய்வு பெற போகிறாரா? RSS தலைவர் பேச்சால் பரபரப்பு

அரசியல்வாதிகள் 75 வயதில் ஓய்வு பெற வேண்டும் என்று RSS தலைவர் மோகன் பகவத் பேசி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

RSS தலைவர் மோகன் பகவத் நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது, ஒரு நபர் 75 வயதை கடந்தவுடன் பொறுப்புகளில் இருந்து விலகி ஓய்வு பெற வேண்டும் என்று தெரிவித்தார். இதனால், பிரதமர் மோடி 75 வயதில் ஓய்வு பெற வேண்டும் என மோகன் பகவத் பெயரை குறிப்பிடாமல் பேசியதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

பிரதமர் மோடி அடுத்த மாதம் 75வது வயதில் அடி எடுத்து வைக்கிறார். இதனால், பிரதமர் மோடி அரசியலில் இருந்து ஓய்வு பெற போகிறாரா என கேள்வி எழுந்துள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news