Tuesday, July 29, 2025

CSKனா மட்டும் கசக்குதா? சரமாரியாக விளாசும் ரசிகர்கள்

நடந்து முடிந்த 18வது IPL தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, Play Offக்கு முன்னேறாமல் தொடரில் இருந்து வெளியேறியது. மொத்தமுள்ள 14 போட்டிகளில் வெறும் 4 போட்டிகளை மட்டுமே சென்னை வென்றது. இதற்கு அந்த அணியின் பேட்ஸ்மேன்களே முக்கிய காரணமாவர்.

Play Offக்கு செல்லாததைக் காட்டிலும், பாயிண்ட் டேபிளில் கடைசிவரை CSK 10வது இடத்தில் இருந்ததைத் தான், ரசிகர்களால் தாங்க முடியவில்லை. தொடர் முடிந்தும்கூட தங்களது ஆதங்கத்தை தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வருகின்றனர். நிலைமை இப்படியிருக்க சென்னை அணியில் மோசமாக சொதப்பிய டெவன் கான்வே, ரச்சின் ரவீந்திரா இருவரும் அமெரிக்காவில் நடைபெற்று வரும் MLC தொடரில், அதிரடி காட்டி இருக்கின்றனர்.

வாஷிங்டம் பிரீடம் அணிக்காக ஆடிய ரச்சின் 17 பந்துகளில் 42 ரன்கள் குவித்தார். மறுபுறம் டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணிக்காக களமிறங்கிய கான்வே, 44 பந்துகளில் 65 ரன்கள் எடுத்தார். இதேபோல CSKவின் நம்பிக்கையை வீணடித்த இந்திய பேட்ஸ்மேன் ராகுல் திரிபாதி, மகாராஷ்டிரா லீக் தொடரில் அபாரமாக ஆடியிருக்கிறார்.

கோலாபூர் டஸ்கர்ஸ் அணியின் கேப்டனாக களத்தில் குதித்த ராகுல் திரிபாதி, 18 பந்துகளில் 32 ரன்களை எடுத்தார். இது மட்டுமின்றி IPL தொடருக்கு முன்பாக, விஜய் ஹசாரே தொடரிலும் விதர்பா அணிக்காக அடித்து ஆடியிருந்தார். இதையெல்லாம் பார்த்த ரசிகர்கள், ”கோடிக்கணக்குல பணம் வாங்கிட்டு CSKக்கு ஒழுங்கா ஆட மாட்றீங்க.

ஆனா மத்த T20 தொடர்ல எல்லாம் பட்டைய கெளப்புறீங்களே எப்படி?,” என்று, மேற்கண்ட மூவரையும் சரமாரியாக சமூக வலைதளங்களில் விளாசி வருகின்றனர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
Latest News