அரிசி சோறு சாப்பிட்டால் ஆபத்தா?

47
Advertisement

அரிசி சோறு சாப்பிட்டால் உடல் ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல
என்கிற கருத்துப் பரவலாக உள்ளது. சுகர் வரும், பிளட் பிரஷர் வரும்
என்றெல்லாம் தவறான நம்பிக்கை நிலவுகிறது.

உண்மையில், அரிசிச் சோறு சாப்பிட்டால் நோய்கள் குணமாகும்
என்பதுதான் உண்மை.

எந்தெந்த அரிசி என்னென்ன பலன்களைத் தரும்? இதோ பட்டியல் ரெடி

Advertisement
 1. கருப்புக் கவுனி அரிசி: மன்னர்கள் விரும்பி உண்ட அரிசி. புற்று நோய் வராது.
  இன்சுலின் நன்கு சுரக்கும். இதனால் சுகர் வராது- வந்திருந்தாலும் கருப்புக் கவுனி
  அரிசிச் சோறு உண்டால் சுகர் நோய் நீங்கி ஆரோக்கியமாகி இயல்பு வாழ்க்கை வாழலாம்.
 2. மாப்பிள்ளைச் சம்பா: புதிதாகத் திருமணம்செய்யும் ஆண்களுக்கு இந்த அரிசி
  சமைத்து சோறு பரிமாறுவது வழக்கமாக இருந்துள்ளது. வலுவான உடல் பெற
  இந்த அரிசிச் சோறு உண்பது நம்மிடையே இருந்துள்ளது. நரம்பும் வலுவாகி
  சுறுசுறுப்பாக இருக்கும்.
 3. பூங்கார் அரிசி: திருமணமான பெண்கள் நார்மல் டெலிவரி எனும் சுகப்பிரவசத்தில்
  குழந்தை பெற்றுக்கொள்ள இந்த அரிசிச் சோறை உண்டுவந்துள்ளனர். குழந்தை பெற்றபின்
  குழந்தைக்குப் பாலூட்ட நன்கு பால் ஊறும்.
 4. காட்டுயானம் அரிசி: சுகர், மலச்சிக்கல், புற்று நோய் தீர பாரம்பரியமான காட்டு
  யானம் அரிசியை சமைத்து உண்டுவந்துள்ளனர். இந்த நோய்களுக்காக எந்த மருந்தையும்
  எடுத்துக்கொள்ளாமல் உணவே மருந்து மருந்தே உணவு என்கிற அடிப்படையில் வாழ்ந்துவந்துள்ளனர்.
 5. கருத்தக்கார் அரிசி: மூலம், மலச்சிக்கல் தீர இந்த அரிசி உணவே அருமருந்தாக விளங்கியது.
 6. காலாநமக் அரிசி: மூளை, நரம்பு, இரத்தம், கிட்னிப் பிரச்சினைகள் நீங்கி உடல் ஆரோக்கியமாகும்.
  புத்தர் இந்த அரிசி உணவை சாப்பிட்டதாகக் கூறப்படுகிறது-
 7. மூங்கில் அரிசி: வயதானவர்கள் சந்திக்கும் பிரச்சினை மூட்டு வலி, முழங்கால் வலி. மரண வேதனையை
  சந்திக்கும் நபர்கள் மூங்கில் அரிசியை சமைத்து உண்டால் இளைஞர்கள்போல் துள்ளிக்குதித்து நடமாடலாம்.
 8. அறுபதாம் குறுவை அரிசி: வயதானவர்களுக்கு ஏற்படும் உடல் குறைபாடுகளுள் ஒன்று எலும்பு
  வலுவின்றிப் போவது. இக்குறைபாடு நீக்கும் அருமருந்து தான் அறுபதாம் குறுவை அரிசி.
 9. இலுப்பைப் பூ சம்பா அரிசி: பக்கவாதம் நீங்க, கால் வலி அகல இந்த அரிசிச் சாப்பாடே போதும்.
 10. தங்கச் சம்பா அரிசி: இந்த அரிசிச் சோறு சாப்பிடுவோருக்கு பல், இதயம் வலுவாகும்.
 11. கருங்குறுவை அரிசி: இழந்த சக்தியை மீட்டுத் தரும் உன்னதமான சோறுதான் கருங்குறுவை அரிசி.
 12. கருடன் சம்பா அரிசி: இந்த அரிசியை சமைத்து சாப்பிடுவோரின் ரத்தம், மனம், உடல் சுத்தமாகும்.
 13. கார் அரிசி சோறு சாப்பிட்டால் தோல் நோய் வராது
 14. குடை வாழை அரிசி உணவு குடலை சுத்தப்படுத்தும்.
 15. கிச்சிலிச் சம்பா அரிசி சோறு சாப்பிடுபவர்களுக்கு இரும்புச் சத்து, சுண்ணாம்புச் சத்து அதிகரிக்கும்.
 16. சீரகச் சம்பா அரிசிச் சாப்பாடு அழகை அதிகரிக்கும், நோய் எதிர்ப்பாற்றலைக் கூட்டும்.
 17. தூய மல்லி அரிசி உணவு உடல் உள்ளுறுப்புகளை வலுவாக்கும்.
 18. குழியடிச்சான் அரிசியை சமைத்து உண்பதால் குழந்தை பெற்ற பெண்களுக்குத் தாய்ப்பால்
  நன்கு ஊறும். குழந்தையும் கொழுகொழுவென வளரும்.
 19. பிசினி அரிசி உணவு மாதவிடாய்க் கோளாறு, இடுப்பு வலியைப் போக்கும்.
 20. சூரக்குறுவை அரிசி பெருத்த உடம்பை சிறுக்கச் செய்து அழகை அதிகரிக்கும்
 21. வாலான் சம்பா அரிசிச் சாப்பாடு கருவுற்ற பெண்கள் சுகப்பிரவசம் பெற வைக்கும். இடை
  மெலியும், அழகு கூடும். இடுப்பு வலுவாகும்,
 22. வாடான் சம்பா அரிசிச் சோறு சாப்பிட்டால் நன்கு தூக்கம் வரும்.

அரிசி உணவைப் பல நூறு ஆண்டுகளாக நம் முன்னோர் உண்டுவந்து எவ்வித
நோயுமின்றி ஆரோக்கியமாக வாழ்ந்து வந்துள்ளனர். நாமும் இந்த பாரம்பரிய
அரிசியையே நமது விருப்பத்துக்கேற்ப சமைத்து உண்போம். ஆரோக்கியமான
உடல் வலுவுடன் நீண்டகாலம் வாழ்வோம். மருத்துவச் செலவைத் தவிர்ப்போம்.

அரிசிச் சாப்பாடு அழகு, ஆரோக்கியம் தரும்.