ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளத்தில் ஆதார் இணைக்கப்பட்ட கணக்கு மூலம் மாதந்தோறும் 12 டிக்கெட்டுகளும், ஆதார் இணைக்காத கணக்கு மூலம் 6 டிக்கெட்டுகள் மட்டுமே முன்பதிவு செய்யலாம் என்ற கட்டுப்பாடுகள் முன்பு இருந்தது.
ஆனால் தற்போது ஆதார் இணைக்காத கணக்கு மூலம் ஒரு மாதத்துக்கு 12 டிக்கெட்டுகளும், ஆதார் இணைத்த கணக்கு மூலம் 24 டிக்கெட்டுகள் வரையும் முன்பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ரயில்வே அமைச்சகம் செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது.