‘நீறு பூத்த நெருப்பு போலன்னு’ தமிழ்ல ஒரு பழமொழி இருக்கு. இதுக்கு என்ன அர்த்தம்னா வெளிப்படையா நெருப்பு அணைஞ்சு போய்ட்ட மாதிரி தெரிஞ்சாலும், உள்ளுக்குள்ள அதோட கங்கு இருந்துட்டு தான் இருக்கும். லேசா ஒரு பொறி கெடைச்சா மறுபடியும் நெருப்பு பத்திக்கும். இந்த பழமொழிய அமெரிக்கா – ஈரான் பிரச்சினைக்கு எடுத்துக்காட்டா சொல்லலாம்.
ஈரான் அணு ஆயுதம் தயாரிக்குதுன்னு இஸ்ரேல் போர் தொடுக்க, இடையில புகுந்து அமெரிக்கா பயங்கர பெர்பாமன்ஸ போட்டது. இதனால போர் முடிவுக்கு வந்தாலும் கூட ஈரான், டிரம்ப் மேல எக்கச்சக்க காண்டுல இருக்காம். நெலமை இப்படியிருக்க டிரம்பை தீத்துக்கட்டனும்னு, ஈரான் மக்கள் நிதி வசூல் நடத்திட்டு வர்ற விஷயம் வெளியாகி, உலக அரங்குல மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கு.
இதுக்காக ‘ இரத்த ஒப்பந்தம்’ அப்படிங்கிற பேர்ல இதுவரைக்கும், சுமார் 4 கோடி ரூபாய நிதியா அந்த நாட்டு மக்கள் திரட்டி இருக்காங்க. இன்னும் 6 கோடிய நிதியா திரட்டி, டிரம்பை யாரு போட்டு தள்றாங்களோ அவங்களுக்கு இந்த 10 கோடி ரூபாய கொடுக்கலாம்னு, முடிவெடுத்து இருக்காங்களாம்.
சரி மக்கள் தான் ஏதோ கோபத்துல இருக்காங்க போலன்னு நெனைச்சா. அந்த நாட்டு மூத்த அதிகாரி ஜவாத் லாரிஜானி இன்னும் ஒருபடி மேல போய், டிரம்ப பகிரங்கமா மெரட்டி விட்ருக்காரு. லேட்டஸ்டா அவரு என்ன சொல்லி இருக்காருன்னா, ” அமெரிக்காவுல இருக்க புளோரிடாவுல உள்ள பங்களாக்கு டிரம்ப் அடிக்கடி வருவாரு.
அங்க அவர் சூரிய குளியல் எடுக்குறப்ப ஒரு ட்ரோன அனுப்பி, டிரம்ப் சோலிய மொத்தமா முடிச்சிருவோம்னு பேசியிருக்காரு. ஈரானோட அணு ஆயுத நிலையங்கள் மேல அமெரிக்கா தாக்குதல் நடத்துனது, அப்புறம் ஈரான் ராணுவ ஜெனரலா இருந்த காசிம் சுலைமானிய கொன்னதுன்னு டிரம்ப் மேல ஈரானுக்கு எக்கச்சக்க வன்மம் இருக்கு.
இதனால மறுபடியும் ஒரு போர் வந்துருமோன்னு உலக நாடுகள் அச்சத்துல இருக்கு. ஆனா ஈரானோட இந்த மிரட்டலுக்கு டிரம்ப், ” நான் 7 வயசுல இருந்தே சூரிய குளியல் எடுக்குறது இல்ல. அவங்க என்ன பயமுறுத்தி பாக்குறாங்க,” அப்படின்னு ரொம்ப கூலா பதில் சொல்லி இருக்காரு.
டிரம்ப் விஷயத்துல ஈரானோட அடுத்த நடவடிக்கை, என்னவா இருக்க போகுதுன்னு நாம பொறுத்திருந்து தான் பாக்கணும். ஈரான் நாட்டோட இந்த மிரட்டல் பத்தி நீங்க என்ன நெனைக்குறீங்க? அப்படிங்கிறத மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க.