சிஎஸ்கே அணியில் இடம் பிடித்த கலீல் அகமதை தங்கள் அணிக்கு கொடுக்குமாறு மும்பை இந்தியன்ஸ் அணி கோரிக்கை விடுத்திருக்கிறது. கலீல் அகமது நடந்து முடிந்த ஐபிஎல் சீசனில் 14 போட்டிகளில் விளையாடி 15 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார்.
இந்த நிலையில் மும்பை அணி கலில் அகமதை தருமாறு கேட்டுக் கொண்டுள்ளது. அதற்கு பதில் தீபக்சாகரை சிஎஸ்கே அணிக்கு அனுப்புவதாக மும்பை அணி கூறியுள்ளது. தீபக் சாகர் பெரும்பாலும் கடந்த காலங்களில் சிஎஸ்கே தொடருக்கு முக்கிய வீரராக விளையாடி வந்தவர். ஆனால், கடந்த சீசனில் மும்பை அணிக்கு விளையாடிய போது 14 ஆட்டங்களில் 11 விக்கெட்டுகளை எடுத்தார். எனவே, அவருடைய வயது தற்போது 33 ஆகும், அதே சமயம் கலீல் அகமதின் வயது 27 ஆக இருக்கிறது.
இந்த நிலையில் மும்பை அணி கலீல் அகமதை கேட்டிருப்பதால், சிஎஸ்கே அணி என்ன செய்யப் போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.தீபக் சாகர் சிஎஸ்கே அணியின் முக்கிய வீரராக இருந்தாலும், கடந்த மூன்று ஆண்டுகளாக காயங்களால் பெரும்பாலான போட்டிகளில் விளையாடாமல் இருந்தார். இதனால் தீபக் சாகரை மீண்டும் அணிக்குள் கொண்டு வருவது தவறான ஒரு விஷயமாக இருக்கும் என சிஎஸ்கே ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.