“எங்க ஊருல ஓடுற ட்ரைன்ன ஒத்த கையால நிறுத்துனவேன் அதும் left handல” என்னும் வடிவேலுவின் வசனத்தை கேட்டு அனைவரும் சிரித்திருப்போம் ஏன் என்றால் அது சாத்தியமற்ற ஒன்று,யானைகள், மாடுகள் ,மனிதர்கள் போன்றவைகள் ரயிலில் மாட்டி சின்னாபின்னமாகிருக்கிறார்கள்,காரணம் ரயிலின் எடை மற்றும் வேகம்.
எவ்வளவு பெரிய மிருகம் அடிபட்டாலும் உள்ளிருக்கும் பயணிகளுக்கு சத்தம் ஒருதுளி கூட கேக்காது,ரயிலும் எந்தவித சேதமுமின்ரி செல்லும்,இப்படி பட்ட ரயிலை ஒரு புழுக்கூட்டம் நிறுத்தியது என்று கூறினால் நம்புவீர்களா நீங்கள்,நம்பி தான் ஆகவேண்டும்.
ரயிலை நிறுத்தியது சிவப்பு கம்பளிப்புழுவாகும் (Red hairy caterpillar). இந்த புழுவின் உடலில் சிவப்பு மற்றும் கருப்பு நிறத்தில் முடிகள் நிறைந்திருக்கும். இதன் உடல் 1 கிராம் கூட இருக்காது. நீளம் சுமார் மூன்று இன்ச் இருக்கும்.
இந்த புழுக்கள் கூடு கட்டும் காலத்தில் ஆயிரக்கணக்கில் ஒரு இடத்தில் குவிந்து கிடக்கும். அப்படி ஒரு நாள் சோழவந்தான் அருகே தண்டவாளத்தில் பல ஆயிரக்கணக்கான சிவப்பு கம்பளிப் புழுக்கள் குவிந்து கிடந்துள்ளன. மதுரையிலிருந்து சுமார் 600 பயணிகளுடன் வேகமாக வந்த பாண்டியன் விரைவு ரயில் இந்த புழுக்களின் மேல் ஏறியது. புழுக்கள் ரயிலின் சக்கரத்தில் நசுங்கி கூழ் போல் திரவ நிலையை அடைந்ததுள்ளது. இதனால் வழு வழு என அதிக வழுக்கும் தன்மை உடைய புழுவின் சகதி உருவாகியுள்ளது. இந்த சகதியில் ரயிலின் சக்கரங்கள் மாட்டிக்கொண்டன. சக்கரங்கள் சுற்றின . ஆனால் ரயிலால் நகர முடியவில்லை. சக்கரம் நின்ற இடத்திலேயே சுற்றியவண்ணம் இருக்கிறது. ரயிலால் இந்த புழுக்களின் கூட்டத்தைத் தாண்ட முடியவில்லை.சோழவந்தானில் பாண்டியன் விரைவு ரயில் புழுக்களின் சகதியில் மாட்டிக்கொண்டது. இது நடந்து சுமார் 15 ஆண்டுகள் இருக்கும்.