உலக வர்த்தகத்தை நிர்ணயிக்கும் ‘Black Friday’ தொடங்கிய வரலாறு!

218
Advertisement

உலக பொருளாதாரத்தின் போக்கை தீர்மானிப்பதில் Black Friday இன்றியமையாத பங்கு வகிக்கிறது. அந்த ஒரு நாளை நம்பி கோடிகளில் முதலீடு செய்யப்படுகிறது. இப்படி ஒரு நாள் தொடங்கிய பின்னணியை பற்றி இப்பதிவில் பார்ப்போம்.

1869ஆம் ஆண்டு, Jay Gould மற்றும் James Fisk என்ற பொருளாதார நிபுணர்கள், நியூயார்க் பங்குச்சந்தையில் ஏற்பட்ட அதீத தங்க வீழ்ச்சியை குறிக்கவே முதலில் இப்பதத்தை பயன்படுத்தினர்.

மேற்கத்திய நாடுகளில், ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதம் நான்காவது வியாழக்கிழமை ‘Thanksgiving Day’வாக கொண்டாடப்படுகிறது. பல நாடுகளிலும் அரசு விடுமுறையாக கடைபிடிக்கப்படும் இந்நாளுக்கு பிறகு, இயல்பாகவே மக்கள் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை தொடங்குவது வழக்கம்.

அந்த மனநிலையை, அப்படியே வியாபாரமாக்கும் நோக்கத்தில் தான், Thanksgiving தினத்திற்கு அடுத்து வரும் வெள்ளியை Black Friday என குறிப்பிட்டு, கவர்ச்சிகரமான சலுகைகளையும் தள்ளுபடிகளையும் சிறு மற்றும் பெரு வியாபாரிகள் ஒருசேர அள்ளி வழங்க ஆரம்பித்தனர்.

இதன் விளைவாக, 1966ஆம் ஆண்டு யதேர்ச்சையாக மக்கள் கடைகளை நோக்கி படையெடுக்க தொடங்கினர். இதனால் ஏற்பட்ட வரலாறு காணாத போக்குவரத்து நெரிசலை, ஊடகங்கள் ‘Black Friday’ என பதிவு செய்தனர்.

இந்த போக்கை அப்படியே வர்த்தக சந்தையும் பிடித்து கொள்ள, ஆண்டு தோறும் பில்லியன் கணக்குகளில் பணப் பரிவர்த்தனை நடக்கும் கிறிஸ்துமஸ் மற்றும் வருட இறுதி ஷாப்பிங்கிற்கு ‘Black Friday’என்ற பெயரே நிரந்தரமானது.

2001ஆம் ஆண்டு, வருடத்தின் உச்சகட்ட வர்த்தக நாள் என்ற இடத்தை பிடித்த ‘Black Friday’ தற்போது வருடந்தோறும் சர்வதேச அளவிலான பொருளாதார தாக்கத்தை ஏற்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.