நோபல் பரிசை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்

430
Advertisement

உலகின் மிகவும் மதிப்புமிக்க பரிசாக கருதப்படும் நோபல் பரிசு இலக்கியம், இயற்பியல், மருத்துவம், வேதியியல், அமைதி போன்ற துறைகளில் சிறப்பாக செயல்பட்டு மனித குலத்துக்கு பயனளித்த நபர்களுக்கு முன்னதாக வழங்கப்பட்டு வந்தது.

1986ஆம் ஆண்டுக்கு பின் இந்த துறைகளுடன் பொருளாதாரமும் இணைக்கப்பட்டது. ஸ்வீடனில் பிறந்த Alfred Nobel வேதியியல், பொறியியல் மற்றும் தொழில்துறையிலும் சிறந்து விளங்கினார். டைனமைட் கண்டுபிடித்தற்காக பிரபலமாக அறியப்படும் Alfred, 1895ஆம் ஆண்டு தன்னுடைய உயிலில் கையெழுத்திட்டார்.

அதில், மேற்குறிப்பிட்ட துறைகளில் சாதனை படைத்த நபர்களுக்கு உயரிய பரிசு வழங்குவதற்காக தன்னுடைய  சொத்துக்கள் முழுவதையும் அர்பணிப்பதாக குறிப்பிட்டிருந்தார். 1896இல் Alfred மறைந்துவிட, 1901ஆம் ஆண்டு முதல் நோபல் பரிசு வழங்கப்பட்டது.

நோபல் பரிசு பெரும் நபர்களுக்கு நோபல் டிப்ளமோ, நோபல் மெடலுடன் 1 மில்லியன் டாலர் பரிசுத் தொகையும் வழங்கப்படுகிறது. இதுவரை அளிக்கப்பட்ட 603 விருதுகளில் 962 தனி நபர்களும் 28 அமைப்புகளும் விருதை பெற்றுள்ளன. 1901ஆம் ஆண்டில் இருந்து 57 பெண்கள் நோபல் பரிசை  வென்றுள்ளனர்.

அவர்களுள் நோபல் பரிசை முதல் முறையாக பெற்ற பெண் மேரி கியூரி ஆவார். இரண்டு முறை நோபல் பரிசை பெற்ற ஒரே பெண் ணும் மேரி கியூரி தான் என்பது குறிப்பிடத்தக்கது.