கோடிகளில் சம்பாதிக்கும் டீக்கடைக்காரர்! இது தான் சீக்ரட்

164
Advertisement

டீக்கடை வைத்தவர்களெல்லாம் பெரிய அளவில் வந்துவிடுகிறார்கள் என கூறுவது உண்மை தான் போல என பலரையும் பேச வைத்துள்ளார் 22 வயதான சஞ்சித்.

ஆஸ்திரேலியாவில் பிபிஏ படிப்பை பாதியிலேயே விட்டுவிட்ட சஞ்சித், Dropout Chaiwala என்ற பெயரில் டீக்கடை தொடங்கி நடத்தி வருகிறார்.

மேலும், டீ வியாபாரத்தை சிறப்பாக நடத்துவதால், இதுவரைக்கும் 5.2 கோடி வருவாய் ஈட்டி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி வருகிறார்.

இருந்தாலும் இது போன்ற செய்திகள் மக்களிடையே எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை அறிந்துள்ள சஞ்சித், தன்னை முன்னுதாரணமாக எடுத்து கொண்டு இளைஞர்கள் படிப்பை கைவிட்டு விடக் கூடாது என வேண்டுகோள் விடுத்துள்ளார்.