ரஷ்யாவுக்குப் புதுமையான முறையில் எதிர்ப்பைத்
தெரிவித்த ஹோட்டல் ஒன்றின் செயல் வலைத்
தளவாசிகளைக் கவர்ந்துள்ளது.
பிப்ரவரி 24 ஆம் தேதிமுதல் உக்ரைன் நாட்டின்மீது
ரஷ்யா போரைத் திணித்து தொடர்ந்து நடத்திவருகிறது.
ரஷ்யாவின் இந்தச் செயலுக்குப் பல நாடுகள் கண்டனம்
தெரிவித்து பொருளாதாரத் தடைகள் விதித்து தங்கள்
எதிர்ப்பைத் தெரிவித்துள்ளன.
ஐரோப்பா மற்றும் அமெரிக்கா முழுவதும் சூப்பர்
மார்க்கெட்டுகளில் இருந்து ரஷ்ய உணவுப் பொருட்கள்
மற்றும் பானங்கள் அகற்றப்பட்டுள்ளன. ரஷ்யப் பூனைகள்
கூட சர்வதேசப் போட்டிகளில் கலந்துகொள்ளத் தடை
விதிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம், அமெரிக்காவில் உக்ரைன் நாட்டு உணவு
வகைகளையும் பானங்களையும் பிரபலப்படுத்தும் முயற்சி
தொடங்கப்பட்டுள்ளது. உக்ரைன் உணவகங்கள், பானகங்கள்
அடங்கிய பார்களும் நிறைய திறக்கப்பட்டு வருகிறன்றன.
இந்த நிலையில், கேரள ஹோட்டல் ஒன்று எளிய வழியில்
தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது.
அந்த உணவகம் தங்கள் உணவுப் பட்டியலில் இருந்து
ரஷ்ய சாலட்டை நீக்கியுள்ளது.
அதன் எதிரொலியால் அநேகம்பேரின் கவனத்தை
ஈர்த்துள்ளது அந்த உணவகம்.
சாத்வீக முறையில் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ள
அந்த உணவகத்தைப் பலர் பாராட்டியும், சிலர் விமர்சித்தும்
கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.