மலைவாசிகள் தயாரித்த நூதன முகக் கவசம்

204
Advertisement

திண்டுக்கல் மாவட்டம், பண்ணைக்காடு, வடகரைப் பாறை என்னும்
இடத்தில் வசிக்கும் மலைவாழ் மக்கள் பிசிலாம் மரத்தின் இலைகளைப்
பயன்படுத்தி முகக் கவசம் அணிந்துள்ளனர்.

பிசிலாம் மர இலைகள் கிருமிகளை அண்டவிடாதாம். இந்த இலைகளையும்
வெங்காயத்தையும் கோர்த்து மாலையாக அணிந்துகொண்டால் ஜலதோஷம்
குணமாகிவிடுமாம்.

பிசிலாம் மர இலைகளின் மணம் நுரையீரல், சுவாசப் பாதைகளைத்
தூய்மையாகப் பராமரிக்கும் என்பது மலைவாசிகளின் நம்பிக்கை.

கொடைக்கானல் பகுதி மலைவாழ் மக்களின் இந்தச் செயல் விழிப்புணர்வை
ஏற்படுத்துவதாக அமைந்துள்ள. மூலிகை பற்றிய அக்கறையையும் அதிகரித்துள்ளது.

இந்த விழிப்புணர்வு அனைத்துத் தரப்பு மக்களிடம் வந்துவிட்டால் கொரோனாவை
எளிதில் விரட்டிவிடலாம்.