தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் இன்ஃபுளூவன்சா காய்ச்சல் பரவல் இருப்பதாகவும், அதே சமயம் அச்சம் அடையும் அளவுக்கு தாக்கம் இல்லை என்றும் பொது சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த இரண்டு வார காலமாக காய்ச்சல் பரவி வருகிறது. இது சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கோவை, மதுரை, சிவகங்கை, தஞ்சாவூர், தேனி மாவட்டங்களில் காய்ச்சல் பாதிப்பு வெகுவாக அதிகரித்து வருகிறது.
இது சாதாரண இன்புளூவன்சா காய்ச்சல் மட்டுமே என்றும் புதிய வகை வைரஸ் தொற்று அல்ல என்றும் பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 50 சதவீத நோயாளிகளுக்கு “இன்புளூவன்சா ஏ தொற்று” பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாகவும், காய்ச்சல் ஏற்பட்டால் தாமதம் இன்றி ரத்தப் பரிசோதனை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.