Wednesday, July 16, 2025

இண்டிகோ விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு : அவசர அவசரமாக தரையிறக்கம்

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் இருந்து சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூருக்கு இன்று காலை 6.35 மணிக்கு 51 பயணிகளுடன் புறப்பட்ட இண்டிகோ விமானம் (6E-7295), புறப்பட்ட சில நிமிடங்களில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து அந்த விமானம் மீண்டும் இந்தூர் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

விமானம் தரையிறங்கியதும், பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். இந்த சம்பவம் பயணிகள் மற்றும் விமான நிலையத்தில் சிறிது பரபரப்பை ஏற்படுத்தியது. பயணிகளுக்கு விமானக் கட்டணம் திருப்பி வழங்கப்படும் என இண்டிகோ நிர்வாகம் அறிவித்துள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news