டெல்லியில் இருந்து கோவாவிற்கு சென்ற இண்டிகோ விமானத்தில் நடுவானில் தொழில்நுட்ப கோளாறு கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து, விமானம் அவசர அவசரமாக மும்பையில் தரையிறக்கப்பட்டது.
விமானத்தில் இருந்த பணிகள் 191 பேரும் வெளியேற்றப்பட்டு ஒரு ஹோட்டலில் தங்கவைக்கப்பட்டனர். பின்னர் மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டு பயணிகள் அனைவரையும் அனுப்பி வைத்தனர்.
பயணிகளுக்கு ஏற்பட்ட இந்த சிரமத்திற்கு வருந்துகிறோம் என இண்டிகோ விமான நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.