Thursday, May 8, 2025

பாகிஸ்தான் பிரபலங்களுக்கு எதிராக இந்தியா எடுத்த அதிரடி முடிவு

கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாத தாக்குதல் நடைப்பெற்றது. இதில், 26க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதற்கு பாகிஸ்தானை சேர்ந்த பயங்கவராத அமைப்புதான் காரணம் என்று இந்தியா கூறியிருக்கிறது.

இந்த சம்பவத்திற்கு பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில், அந்த நாட்டை சேர்ந்த சில பிரபலங்களுக்கு எதிராக இந்தியா நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்தியர்கள் பலர், பாகிஸ்தானை சேர்ந்த பிரபலங்களை தங்களின் சமூக வலைதளங்களில் பின்தொடர்வது வழக்கம். இதற்கு முட்டுக்கட்டை போடும் வகையில் பிரபலமாக இருக்கும் பாகிஸ்தான் பாடகர்களான ஃபவாத் கான், ஆதிஃப் அஸ்லாம், மவ்ரா ஹோகேன், சபா கொமேர், அத்னான் சித்திக்கி, மாஹிரா கான் உள்ளிட்ட பலரின் இன்ஸ்டாகிராம் கணக்குகள் இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளது.

Latest news