லவ் லெட்டர் எழுதவும் AI உதவியை நாடும் 2K கிட்ஸ்… Worst பா!

43
Advertisement

சமீப காலங்களில் Chat GPT, Artificial Intelligence போன்ற வார்த்தைகளை பரவலாக கேள்விப்படாமல் இருக்க முடியாது.

Artificial Intelligence என அழைக்கப்படும் மெய்நிகர் நுண்ணறிவு தொழில்நுட்பம் டிஜிட்டல் உலகில் பல்வேறு நோக்கங்களுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

அண்மையில் McAfee நிறுவனம் நடத்திய ஆய்வில், 62 சதவீத இந்தியர்கள், காதல் கடிதம் எழுத AI தொழில்நுட்பமான Chat GPTயின் உதவியை நாடுவதாக தெரியவந்துள்ளது.

Advertisement

காதலை சொல்ல GPTயை பயன்படுத்தியதில் ஆண்களே அதிகம். மேலும், Chat GPT தொழில்நுட்பத்தின் மூலம் எழுதப்பட்ட காதல் கடிதத்தை மனிதனால் எழுதப்பட்டதா அல்லது செயற்கையாக உருவாக்கப்பட்டதா என 78 சதவீத இந்தியர்களால் கண்டறிய முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.