அடுத்த 5 ஆண்டுகளில் 1,000 புதிய ரயில்கள் அறிமுகப்படுத்தப்படும் என்று ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் அறிவித்துள்ளார். ஜப்பான் நாட்டின் உதவியுடன் நடைபெறும் இந்த திட்டத்தின் மாதிரி ரயில் 2026ஆம் ஆண்டில் தயாராகும். 2027ஆம் ஆண்டில் முழுமையாக வணிக ரீதியில் இயக்கத் தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயணிகளின் வசதிக்காக அம்ரித் பாரத், நமோ பாரத் போன்ற புதிய ரயில்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. ரயில்வே கட்டணங்கள் பாகிஸ்தான், பங்களாதேஷ் போன்ற நாடுகளை விட குறைவாக இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ரயில் தடம் புரள்வது ஆண்டுக்கு 170 என்ற எண்ணிக்கையில் இருந்து 30க்கு கீழ் குறைந்துள்ளது. ரயில் விபத்துகள் 80 சதவீதம் குறைந்துள்ளன. இந்திய ரயில்வேயை முழுவதும் தனியார்மயமாக்கும் எண்ணம் இல்லை என்று ரயில்வே அமைச்சர் வைஷ்ணவ் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.