இந்திய ரயில்வே உலகின் மிகப்பெரிய ரயில்வே நெட்வொர்க்குகளில் ஒன்றாகும். தினசரி லட்சக்கணக்கான மக்கள் பயணம் செய்கிறார்கள். இது இந்திய பொருளாதாரத்தின் முதுகெலும்பாக விளங்குகிறது.
சமீப காலங்களில், இந்திய ரயில்வே தனது சேவைகளை நவீனமயமாக்கி, வருவாயை அதிகரிக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நடவடிக்கைகள் உண்மையிலேயே ரயில்வேயின் வருவாயை பெரிதளவில் அதிகரித்துள்ளன.
இந்திய ரயில்வேயில் சுமார் 12.5 லட்சம் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். தினமும் 13,000 ரயில்கள் இயக்கப்படுகின்றன. இவ்வளவு ரயில்களை இயக்குவதன் மூலம், இந்திய ரயில்வே தினசரி சுமார் 400 கோடி ரூபாய் வருமானம் ஈட்டுகிறது. இந்த வருவாயில் மிகப்பெரிய பங்கு பயணிகள் ரயில் மூலம் அல்ல சரக்கு ரயில்கள் மூலம் வருகிறது. மாதந்தோறும் கணக்கிட்டால், ரயில்வேயின் வருவாய் 12,000 கோடி ரூபாயாகும்.
சரக்கு ரயில்களின் வருவாயைத் தவிர, பயணிகள் ரயில்களின் வருமானமும் ரயில்வேக்கு மிகவும் குறிப்பிடத்தக்கதாகும். இதுமட்டுமின்றி இந்திய ரயில்வே ரயில் நிலையங்களில் உள்ள கடைகள், விளம்பரங்கள், பிளாட்பார்ம்கள் மற்றும் டிக்கெட்டுகளின் மூலம் கூடுதலான வருவாயை ஈட்டுகிறது.