பல்வேறு நெருக்கடிகளை சந்தித்த கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஜன.,06ம் தேதி கட்சித் தலைவர் பதவியில் இருந்தும், பிரதமர் பதவியில் இருந்தும் விலகுவதாக அறிவித்தார். மேலும் புதிய தலைவர் தேர்வாகும் வரை, பதவியில் நீடிப்பேன் எனக் கூறியிருந்தார்.
இந்நிலையில், கனடா பிரதமர் தேர்தலில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கனடா எம்.பி.யான சந்திரா ஆர்யா போட்டியிடுவேன் என அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் : கனடாவை ஒரு இறையாண்மை கொண்ட குடியரசு நாடாக மாற்ற விரும்புகிறேன்.எங்கள் தேசத்தை மீண்டும் கட்டியெழுப்பவும், எதிர்கால சந்ததியினருக்கான செழிப்பை பாதுகாக்கவும், திறமையான அரசை வழிநடத்தவும், நான் கனடாவின் பிரதமர் தேர்தலில் போட்டியிடுகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இந்தியாவின் கர்நாடகாவைச் சேர்ந்தவர் சந்திரா ஆர்யா. 61 வயதாகும் இவர் தற்போது கனடாவின் ஒட்டாவா நகரில் வசித்து வருகிறார்.இவர் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் கட்சியில் எம்.பி.,யாக இருந்து வருகிறார்.