காஷ்மீரின் பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலை தொடர்ந்து இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே போர் பதற்றம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இன்று காலை ஜம்மு காஷ்மீரில் எல்லை பகுதியில் பாகிஸ்தான் இராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியதற்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்தது. இதில் காஷ்மீரை சேர்ந்த பயங்கரவாதிகள் அடில் மற்றும் ஆசிப்பின் வீடுகளை வெடி வைத்து இந்திய ராணுவம் தகர்த்தது.