அமெரிக்காவிலிருந்து மூன்று AH-64E Apache ரக ஹெலிகாப்டர்கள் ஜூலை 21 அன்று காசியாபாத்தில் உள்ள ஹிண்டன் விமானப்படை நிலையத்திற்கு வந்து சேரும். பாகிஸ்தான் எல்லைக்கு அருகே இவை நிலைநிறுத்தப்பட உள்ளன.
ராணுவத்தின் தாக்குதல் திறனை மேம்படுத்தும் விதமாக அமெரிக்காவிலிருந்து நவீன ஹெலிகாப்டர்கள் வாங்கப்பட்டு வருகின்றன. Apache ரக ஹெலிகாப்டர்கள் வானிலை பறக்கும் பீரங்கி போன்றதாகும். இதனால் அனைத்து போர் சூழலையும் எதிர்கொள்ள முடியும்.
Apache தவிர, இந்திய ராணுவம் Rudra மற்றும் Dhruv போன்ற பல்வேறு வகையான ஹெலிகாப்டர்களை இயக்குகிறது. Rudra, Dhruv ஆயுதம் தாங்கிய ஹெலிகாப்டர்களாகும்.
இந்த ஆயுத வர்த்தம் இந்தியா-அமெரிக்கா இடையேயான பாதுகாப்பு கூட்டுறவை வலுப்படுத்தும் முயற்சியாகக் கருதப்படுகிறது.