Sunday, December 7, 2025

டிரம்பின் துணிச்சலால் இந்தியா- பாகிஸ்தான் போர் நிறுத்தப்பட்டது – பாகிஸ்தான் பிரதமர்

கடந்த மே 7ம் தேதி பாகிஸ்தானுக்கு எதிராக ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்தியா தாக்குதல் நடத்தியது. இதையடுத்து மே 10 அன்று இரு நாடுகளுக்கும் இடையிலான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்தது.

இந்நிலையில் நேற்று அஜர்பைஜான் நாட்டு தலைநகர் பாகுவில் நடைபெற்ற அணிவகுப்பில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், “அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் துணிச்சலான மற்றும் தீர்க்கமான தலைமையுடன், இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்டு தெற்காசியாவில் அமைதி மீட்டெடுக்கப்பட்டுள்ளது என பேசியுள்ளார்.

முன்னதாக வர்த்தகத்தை நிறுத்துவேன் என மிரட்டி இந்தியா பாகிஸ்தான் போரை நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் பல முறை கூறியது குறிப்பிடத்தக்கது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News

Latest News