Sunday, February 16, 2025

இந்தியாவில் உலகின் மிக நீளமான 2 ஆவது பெருஞ்சுவர்

உலகிலேயே மிக நீளமான சீனப் பெருஞ்சுவர் பலருக்குத் தெரியும்.
அநேகம்பேர் அங்குசென்று பார்வையிட்டிருப்பீர்கள். ஆனால்,
இரண்டாவது நீளமான பெருஞ்சுவர் இராஜஸ்தான் மாநிலத்தில்
உள்ளது என்பது எத்தனைபேருக்குத் தெரியும்?

ராஜ்சமந்த் மாவட்டம், உதய்ப்பூர் பகுதியில் உள்ள இந்தப்
பெருஞ்சுவர் 38 கிலோமீட்டர் நீளம், 15 அடி அகலம்,
3 ஆயிரத்து 600 அடி உயரமுள்ளது.

15 ஆம் நூற்றாண்டில் ராணா கும்பா என்ற மன்னரால்
கட்டப்பட்ட கும்பல்கர்க் என்ற கோட்டையில்தான்
இந்தப் பெருஞ்சுவர் அமைந்துள்ளது-

கடல் மட்டத்திலிருந்து 1, 100 அடி உயரத்தில் உள்ள இந்தப்
பெருஞ்சுவரிலிருந்து தார்ப் பாலைவனத்தை நன்கு பார்வையிடலாம்.

டெல்லி, மும்பை, ஜெய்ப்பூர் ரயில் நிலையங்கள் வந்து அங்கிருந்து
பால்னா நகர ரயில் நிலையத்தை அடைந்தால் இந்தப்
பெருஞ்சுவர் பகுதியை எளிதில் அடைந்துவிடலாம்.

மலைக்கோட்டைகள் நிறைந்த இராஜஸ்தான் மாநிலத்திற்கு
மற்றுமொரு மகுடமாக அமைந்துள்ளது இந்தப் பெருஞ்சுவர்.
காலத்தால் அழியாத இந்தப் பெருஞ்சுவர் எதற்காகக்
கட்டப்பட்டது என்பது இதுவரை அறியப்படவில்லை.

Latest news