16 ஆவது ஆசிய துப்பாக்கிச்சுடுதல் போட்டி கஜகஸ்தானில் நடைபெற்றது. இந்த போட்டியில் சிறப்பாக செயல்பட்ட இந்தியா 99 பதக்கங்களை வென்று, முதலிடம் பிடித்து வரலாறு படைத்தது.
இந்த 99 பதக்கங்களில் 50 தங்கம், 26 வெள்ளி, 23 வெண்கல பதக்கம் பெற்றுள்ளது. கஜகஸ்தான் 21 தங்கம் உள்பட 70 பதக்கங்களை வென்று இரண்டாவது இடத்தையும், சீனா 15 தங்கம் உள்பட 37 பதக்கங்களை வென்று மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.