Tuesday, July 15, 2025

”இவரு இருக்குற வரைக்கும் இந்தியா” ரவிச்சந்திரன் அஸ்வின் காட்டம்

இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில், இந்தியா 22 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதற்கு இந்திய பேட்ஸ்மேன்கள் பெரிய பார்ட்னர்ஷிப் அமைக்காததே முக்கிய காரணமாகும். இதனால் ரவீந்திர ஜடேஜாவின் ஒருமுனை போராட்டம் ‘விழலுக்கு இறைத்த நீரானது’.

எனவே மான்செஸ்டரில் நடைபெறும் 4வது டெஸ்ட் போட்டியை, கண்டிப்பாக வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இந்தியா இருக்கிறது. கடைசியாக நடந்த 11 டெஸ்ட் போட்டிகளில் இந்தியா 2 போட்டியை மட்டுமே வென்றுள்ளது. இந்திய அணி இப்படி தோற்றுக்கொண்டே சென்றால், 2027ம் ஆண்டு நடைபெறும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற முடியாது.

இந்தநிலையில் இந்தியாவின் தோல்விக்கு நடுவர் தான் காரணம் என, இந்திய பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் குற்றஞ்சாட்டி இருக்கிறார். இதுகுறித்து அவர், ” பால் ரீபெலுடன் நான் பேச விரும்புகிறேன். அது எப்படி, இந்தியா எப்போதெல்லாம் பந்து வீசுகிறதோ அப்போதெல்லாம் அவர் எதிரணியின் பேட்ஸ்மேன்களுக்கு நாட் அவுட் வழங்குகிறார்.

ஆனால் இந்தியா எப்போதெல்லாம் பேட்டிங் செய்கிறதோ, அப்போதெல்லாம் அவர் அவுட் வழங்குவார். இந்தியாவுக்கு எதிராக மட்டுமல்ல மற்ற அணிகளுக்கும் எதிராக அவர் இவ்வாறு செயல்பட்டால் ICC இதை கவனிக்க வேண்டும். இதேபோன்று கில் பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது பேட்டிற்கும், பந்திற்கும் இடையே நிறைய இடைவெளி இருந்தது. அந்த இடைவெளியில் என்னுடைய காரையே நிறுத்தி விடலாம்.

இது அவுட் இல்லை என அனைவருக்கும் தெரியும். ஆனால் இங்கிலாந்து வீரர்கள் அப்பீல் செய்ததும் நடுவர் பால் இதற்கு அவுட் வழங்கினார். ஆனால் இது முதல் முறை அல்ல. என் தந்தை என்னுடன் போட்டியைப் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அவர் என்னிடம், ‘பால் ரீபெல் வரும்போதெல்லாம், இந்தியா வெற்றி பெறாது என்று சொன்னார்,” இவ்வாறு அஸ்வின் நடுவரை சரமாரியாக விமர்சித்து இருக்கிறார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news