எதுக்கெடுத்தாலும் தற்கொலையா? எல்லை மீறும் 2K Kidsஇன் அட்ரோஸிட்டி

228
Advertisement

தலைவலி, காய்ச்சலை போல தற்கொலையை சகஜமாக்கி வைத்துள்ளனர் 2K கிட்ஸ்.

எங்கு திரும்பினாலும் தற்கொலை, எதற்கெடுத்தாலும் தற்கொலை என இன்றைய தலைமுறையின் செயல்பாடுகள் சமூகத்தில் ஒரு அச்சுறுத்தலாகவே மாறிவிட்டது என சொன்னால் மிகையாகாது.

அதே போலத் தான் அண்மையில் கடலூரில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. கடலூர் அரசு உயர்நிலைப் பள்ளி ஒன்றில் 12ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் விஷம் குடித்து விட்டதாக தலைமை ஆசிரியருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரும் அந்த மாணவரை உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார்.

சிறிது நேரத்திலேயே, அதே வகுப்பில் இன்னொரு மாணவியும் விஷம் குடித்துவிட்டதை அறிந்த தலைமை ஆசிரியர் அதிர்ந்தே போனார். மாணவி தனக்கு முகத்தில் கரும்புள்ளிகள் வருவதனால் தற்கொலை செய்துகொள்ள போவதாக கூறியதாகவும், உனக்கு முன் நான் இறந்து போகிறேன் என கூறி மாணவர் விஷம் குடித்ததாகவும், அதை தொடர்ந்து மீதி இருந்த விஷத்தை மாணவி குடித்ததாக தெரியவந்துள்ளது.

தகுந்த நேரத்தில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதால் இருவரும் காப்பாற்றப்பட்டாலும், சிறு தோல்வி, துன்பம், ஏமாற்றம் என எதையுமே தாங்க முடியாமல் தவறான முடிவுகளை கையில் எடுக்கும் இளையதலைமுறையின் போக்கு கவலை அளிப்பதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.