முதல்வர் ஸ்டாலின் விசிட்டுக்கு நடுவே.. ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! மக்கள் பீதி.. என்னாச்சு?

140
Advertisement

ஜப்பான் தலைநகர் டோக்கியோ அருகே இன்று பிற்பகல் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. தொழில் முதலீடுகளை ஈர்க்கும் முதல்வர் ஸ்டாலின் ஜப்பான் சென்றுள்ள நிலையில் ரிக்டர் அளவுகோலில் 6.1 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.

இந்த ஆண்டு தொடக்கம் முதல் உலகின் பல்வேறு இடங்களில் நிலநடுக்கம் ஏற்படுகிறது. இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் துருக்கி, சிரியா ஆகிய நாடுகளில் அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் சுமார் 55 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

அதன்பிறகு ஆப்கானிஸ்தான், சீனா, பாகிஸ்தான், இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன. இருப்பினும் அதிர்ஷ்டவசமாக உயிர் பலி ஏதுவும் ஏற்படவில்லை. இந்நிலையில்தான் இன்று ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது

சிங்கப்பூரில் 2 நாள் பயணத்தை முடித்த முதல்வர் ஸ்டாலின் நேற்று ஜப்பானின் ஒசாகா நகருக்கு சென்றார். இன்று ஒசாகாவில் ஜப்பான் வெளியுறவு வர்த்தக நிறுவனமான ஜெட்ரோவுடன் இணைந்து, இன்று (மே 26) நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் பங்கேற்றார். முதல்வர் ஸ்டாலின் ஒசாகா நகரில் இருக்கும் நிலையில் தான் டோக்கியோ அருகே நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.